மோசடி! மோசடி!! மாபெரும் மோசடி!!!
பொதுமக்களுக்கும் பத்மசாலியர் குல மக்களுக்கும் மிக மிக முக்கிய அறிவிப்பு
சேலம் டவுன் புட்டா நாகய்யர் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பாவநாராயண சுவாமி தேவஸ்தானத்தின் மேல்தளத்தில் கட்டப்பட்டிருக்கும் பத்ம சாலிய ஸ்ரீபாவநாராயண சுவாமி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பொது சொத்தான மேற்படி தேவஸ்தான திருமண மண்டபத்தை, 1932-ஆம் வருடத்திய இந்திய பங்குதாரர்கள் சட்டம் பிரிவு 58. 59ன்படி ஸ்ரீ ராஜேஸ்வரி ஹால் M.P.பாப்பம்மாள் திருமண மண்டபம் என்ற தனி நபர் பெயரில் சேலம் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் 9-7-87-ந் தேதி வரிசை எண்.348/87ல் பதிவு செய்தும், 3-7-87 முதல் பங்கு தாரர்கள் என்று
முன்னாள் சூல நிர்வாகக் கமிட்டி தலைவர் கோட்டி. M.கோவிந்தராஜிலு செட்டியும்,
முன்னாள் அறங் காவலர் குழுத்தலைவர் சிரசால. K.வெங்கடாஜலபதியும்,
மேற்படி நபரின் மைத்துனரான
குட்டல. G. P. ருக்மாங்கதன் என்பவரும், சித்தேஸ்வரா காளியம்மன் கோவில் பூசாரி. கெட்டாம். R. வெங்கடாஜலம் ஆகிய நால்வரும்
ஆடிட்டர் K.இளங்கோவன், B. Sc. F. C. A. மூலமாக மோசடி செய்யும் பொருட்டு பதிவு செய்துள்ளனர்.
மேற்படி மோசடியை அறங்காவலர் குழு ஆகிய நாங்கள் கண்டுபிடித்து, மேற்படி ரிஜிஸ்ட்ரேஷனை ஐவர் குழு பஞ்சாயத் தாரின் தீர்ப்பின்படி ரத்து செய்யவேண்டும் என பலமுறை நேரில் கேட்டும், இன்றுவரை ரத்து செய்யாமல் காலம் கடத்திவரும் மேற்படி நபர்கள் நால்வர் மீதும், சிவில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அறங்காவலர் குழுவாகிய எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
பத்மசாலியர் குல ஸ்ரீ பாவநாராயண சுவாமி தேவஸ்தானம்
இடம் : சேலம்.
நாள் : 22-3-93
திரு. பர்வதம். P. ராமசாமி அறங்காவலர் குழுத் தலைவர்
திரு.தாமரல, K. லட்சுமண பெருமாள்
திரு, போதுல். P. R. பொன்னுசாமி
திரு. போதுல. P. V. சுந்தரம்
திரு.திப்பராயலு. T. V. நாகராஜன்
அறங்காவலர்கள்