பத்மசாலியரும்
செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில் வரலாறு
ஒரு
காலத்தில் மாமன் மச்சான் போடா (போடகல) குடும்பத்தாரும் காஜூல (கடாரி)
குடும்பத்தாரும் இருவரும் வீட்டுச்சாமான் வாங்க செவ்வாய்பேட்டை சந்தைக்கு செல்வது வழக்கம். ஒருநாள் செல்லும் வழியில்
ஒரு கல் கால் இடரி விட்டது . அலட்சியமாக சென்றுவிட்டார்கள். மற்றொறுமுறை பயணம் செய்யும்போது,
அதேகல் அவர்கள் காலை இடரிவிட்டது. அன்று இரவு, அவர்கள் கனவில் ' நான் தான் மாரியம்மன்
' என்னை நீங்கள் கண்டுகொள்ளவில்லை , எனக்கு கோயில் கட்டும்படி அசரியாக சொன்னது. அடுத்து
வழக்கம்போல் , அவ்விருவரும் சந்தைக்கு சென்றார்கள் . அதேஇடத்தில் அந்த கல் இருந்ததை
கண்டு , கல்லை கூடையில் வைத்து சுமந்துவந்தார்கள். பாரம் தாளாமல் அந்தகல் கீழேவிழ
, கல் படுக்கை வசமாக விழாமல் , செங்குத்தாக நட்டிநின்றது. இந்த மகிமை உணர்ந்து அந்த
இடத்திலே கல்லை நிலைபெற செய்தார்கள். அங்குள்ள முள்புதர்களை சுத்தம் செய்து, அங்கு
வழிபாடுசெய்ய வசதிசெய்து கொடுத்தார்கள் .இந்த இடம்தான் இன்று நாம் அனைவரும் வணங்கும்
மாரியம்மன் கோயில் ஆகும்.
இன்றும் நடைமுறையில் உள்ள மரியாதை. ஆடிமாத
மாரியம்மன் திருவிழாவுக்கு முன் காஜூல (கடாரி) குடும்பம் பிள்ளைவீடாக , மேளதாளத்துடன்
வந்து மரியாதை செலுத்திவருகிறார்கள்.
அதேபோல போடா (போடகல) குடும்பம் வீட்டுக்கும் மரியாதையுடன் சென்று, தாலியுடன்
இருவீட்டாரும் இணைந்து சென்று மாரியம்மன் கோயில் அடைந்து விழா துவக்குவார்கள். இந்த
விழா அரிசிபாளையம் தவிர்த்து மற்ற ஏழு ஊர் மக்களும் கூடி விழா சிறப்பாக நடத்துவார்கள்.
தகவல் – அரிசிபாளையம் , போடா.சென்னகிருஷ்ணன் ,
தேவஸ்தான
தலைவர் – 1999.
கடாரி. சென்றாயசெட்டி
பிள்ளை வீடாக கௌரவிக்கப்பட்டார். அவர்கள் தேவாங்கர் தெரு ஆரம்பத்தில் சொந்த வீட்டில்
குடியிருந்தார். அவருக்கு ஆண் சந்ததி இல்லாமல் போனது. அவர் பங்காளி முறையில் சீனிவாசன்
& மாணிக்கம் சகோதரர்களுக்கு மரியாதையை
மாற்றிகொடுத்தார். அவர்கள் இயலாமையால் , கடாரி. ராமு அங்காளிக்கு விட்டுக் கொடுத்தார்.
அவர் அரிசிபாளயத்தில் குடியிருப்பவர் . மேற்படி திருவிழாவுக்கு கலந்து கொள்ள முறணாக
உள்ளது. அவரும் அவரைசார்ந்த அங்காளி குடும்பம் கடாரி . கோவிந்தராஜ் & கிருஷ்ணாராஜ்
சகோதரர்களுக்கு அவர்களுக்கு தாரை வார்த்து ஒப்புக்கொண்டார். இன்றய நிலையில் , மேற்படி
அங்காளிகள் இணைந்து மாரியம்மன் திருவிழாவிற்க்கு உற்சவதார்கள் ஆகிறார்கள்.
கடாரி .கோவிந்தராஜ் & கிருஷ்ணாராஜ்
குடும்பத்தார்கள் அசல் வைணவ சம்பிரதாயத்தை
பின் பற்றுபவர்கள். இவர்கள் சென்னகிருஷ்ண செட்டி தெரு முடிவில்
குடியிருக்கிறார்கள். கடாரி. சென்றாயசெட்டி
அவர்கள் வைணவம் சைவம் சம்பிரதாயத்தை
இணைந்து செயல்படுபவர். இதுவிசயமாக பாவநாராயண
சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தில் நீண்டகாமாக வைணவ சமய பூஜைவிசயமாக வாக்குவாதம் பஞ்சாயத்து
நடந்துள்ளது. அவர்அவர்கள் நிர்வாக காலங்களிலும்
பூஜைகள் மாற்றம் உண்டு.
சுமார்
500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டை சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போதுள்ள கோட்டை இடத்தில் கோட்டை
அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் திருக்கோவிலையும் ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன்
கோவிலை கோட்டை வீரர்கள் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். இந்த கோட்டைக்குள்
இருந்த அம்மனை , திருமணி முத்தாற்றில் அருகில் சேலம், கணக்கர் தெருவில் இருக்கும் கனகசபை
முதலியார் ,சிவசங்கர முதலியார் ஆகியோர் இப்போதிருக்கும் இடத்திர்க்கு இட மாற்றம் செய்து
கோவில் அமைத்து கும்பாபிசேகம் செய்தார்கள்.
பண்டைய
தமிழகம் பல்வேறு மண்டலங்களாக் பிரித்து ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு அமைந்த
மண்டலம் கொங்கு மண்டலம் ஒன்று. தற்போதுள்ள சேலம், நாமக்கல்,தருமபுரி,ஈரோடு,கோவை ஆகிய
பகுதிகளை உள்ளடக்கியது கொங்கு நாடு. மலை வளமும் மனவளமும் நிறைந்த நாடு. புலவரும், புரவலரும்
சிறந்த நாடு. இதன் கீழ் திசையில் புகழ்நிறைந்த பகுதியே சேலம் மாநகரம் ஆகும்.
கோட்டை
மாரியம்மன் கோவில் , சீலம் (மலை) சேர் சேலம் நகரில் திருமணி முத்தாறு கரையில் உள்ளது.
தமிழ் நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள
மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு கம்பம் நட்ட பிறகே மற்ற மாரியம்மன் கோவில்களில் கம்பம்
நடப்படுகிறது. சித்திரை , மார்கழி ஆகிய மாதங்களில் கதிரவன் ஒளி கோட்டை மாரியம்மன் மீது படும்.
ராஜகோபுரம்
– 81 அடி உயரமும்,42அடி 8 இஞ்ச் நீளமும் 30அடி அகலமும் கொண்ட ராஜகோபுரம் 1-7-1993ல்
குடமுழுக்கு செய்யப்பட்டது.
1.சேலத்தில்
அமைந்துள்ள கோட்டை மாரியம்மன்,2.அம்மாபேட்டை, 3.செவ்வாய்பேட்டை, 4.சஞ்சீவிராயன் பேட்டை,
5.சின்னகடை வீதி( இராஜகோபுரம் கிடையாது), 6.குகை, 7.அன்னதானப்பட்டி, 8.பொன்னம்மாபேட்டை
ஆக 8 மாரியம்மன் கோவில்களில் பெரியவள்.தலைமையாக விளங்குகிறது.எட்டு பேட்டைகளை கட்டியாளும்
அன்னை கோட்டை மாரி என்ற சிறப்பு பெயரும் உண்டு.
அபிசேகம்
செய்த நறுமணப் பொருட்கள் கலந்த வேம்பு தீர்த்தம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆடிப் பெருக்கை யொட்டி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்கள் கோட்டை பெருமாள் கோவில் சார்பில் வழங்கப்படும். மாரியம்மன்க்கு அழகிரிநாத பெருமாள் 'அண்ணன்' என்ற முறையில் திருமண சீர்வரிசை பொருள்களாக
சேலை ,வளையல்கள் ,மங்கல நாண் ,காதோலை ,கருமணி ,மஞ்சள், குங்குமம் ,திருக்கல்யாண மலர்
மாலைகள் ,பழங்கள் வழங்கப்படுகிறது.
மண் உறு சாத்துதல் – நேர்த்தி கடனாக பொம்மை உருவங்களை
தம் தலைமீது வைத்துக்கொண்டு திருக்கோவிலை மூன்று முறை வலம் வந்து பலிபீடத்தின் அருகில்
வைப்பார்கள். இதன் பொருள் தமக்கு நலம் அளித்ததற்கு தம்மையே அம்மனுக்கு ஒப்படைப்பு செய்து
விட்டதற்க்கு ஒப்பாகும்.
தர்ம சத்திரத்தை கட்டிக்கொடுத்த தம்பதிகள் – தங்குவதற்க்கு இடவசதி இல்லாமல்
அவதிபடும் பக்தர்களுக்கு சேலம் முத்துகுமாரபிள்ளையும் பட்டாக்காரர் பார்வதி அம்மாளும்
இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்க்கு என்று
1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தை கட்டி கொடுத்தார்கள். இன்று அது
அலுவலகமாக செயல்பட்டுகிறது. பக்தர்களுக்கு பொங்கும் மண்டபம் – 1881 ம் ஆண்டு நவம்பர்
மாதம் தமிழ் விசு ஆண்டு கார்த்திகை திங்கள் சேலத்தைச் சேர்ந்த தாயம்மாள் என்பவர் கோவில்
வடபுறம் அமைத்து கொடுத்துள்ளார்.
சேலம், குகை என்னும் பெயர் வர காரணம்
அருள்மிகு
ஆதிமுனீஸ்வரர் கோவில் கட்டியுள்ள இடத்தில் ஒரு குகை இருந்தது. அந்த குகையின் மவுன சாமியார்
என்னும் சாது ஒருவர் தங்கி தவம் செய்து வந்தார். அந்த பகுதியை சுற்றியே முதலில் குடியிருப்புகள்
தோன்றின. அங்குள்ள மக்கள் அவரை பயபக்தியுடன் வணங்கி வந்தனர். வைகாசி மாத்த்தில் ஒரு
நாள் அந்த முனிவர் மறைந்துவிட்டார். அதன்பின் அவர் வாழ்ந்து வந்த குகையை மூடி அந்த
இடத்தின்மீது முனிவர் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி வணங்கி வருகிறார்கள்.
செவ்வாய்பேட்டை மாரியம்மன்
இக்கோவிலின்
சிறப்பு குதிரையை சாமியாக நினைத்து வணங்கி மீனாட்சி சுந்தரேசன் கோவில் சக்தி அழைப்பு
பூஜையுடன் தொடங்கி கபிலர் தெரு வழியாக குதிரையை ஊர்வலமாக அழைத்து வந்து மாரியம்மன்
கோவிலை 3 மூறை சுற்றி வரும்.
அன்னதானபட்டி
எந்த ஊரில்
இல்லாத செருப்படி திருவிழா நடைபெறும். அன்றய தினம் வேண்டுவோரின் தட்டில் செருப்பு , விளக்குமாறு, முறம், வேப்பந்தழை
ஆகியவற்றை வைத்து பக்தர்கள் தாங்களே வந்து காணிக்கை செலுத்துபவர்கள் 3 முறை சிரசில்
நீவிவிட்டு திருநீறு அணிவிப்பார்கள்.
காந்தி மைதான்
இந்த கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில்
எந்த கோவிலிலும் இல்லாத இரண்டு சிலைகள் உண்டு.
தகவல் – மாலை மலர் -2014 , மலர் –கோட்டை மாரியம்மன்
மகிமை
கோவில்
வெப்சைட் – www.salemkottaimariamman.tinfo.in